அதிகாரம் / Chapter 121

திருக்குறள் 1208

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகாதலர் செய்யும் சிறப்பு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள். அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.

பரிமேலழகர்

இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர்,' என்றாட்குச் சொல்லியது. எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைத்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ - காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ? விளக்கம் (வெகுளாமை: அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின், அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும், 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்வது கூறியவாறு.

English explanation

My frequent thought no wrath excites It is not so?This honour doth my love on me bestow

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?