அதிகாரம் / Chapter 121

திருக்குறள் 1207

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்உள்ளினும் உள்ளம் சுடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது. இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடா நின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்த படாது உளேனாவது எத்தால்? விளக்கம் (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது 'மண்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசை நிலை.)

English explanation

If I remembered not what were I then? And yet,The fiery smart of what my spirit knows not to forget

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?