அதிகாரம் / Chapter 121
திருக்குறள் 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது உயிர் அழியா நின்றது. இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.
பரிமேலழகர்
தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் 'நாம் இருவரும் வேறல்லம்,' என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து; என் இன்னுயிர் விளியும் - எனது இனிய உயிர் கழியாநின்றது. விளக்கம் (அளியின்மை, பின் வருவராதலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு,' என எதிர்அழிந்து கூறியவாறு.)
English explanation
Dear life departs, when his ungracious deeds I ponder o'er,Who said erewhile, 'We're one for evermore'
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.