அதிகாரம் / Chapter 121

திருக்குறள் 1210

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி வாழி மதி.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி. பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம்.

பரிமேலழகர்

வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது. மதி - மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக. விளக்கம் (கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன்கண்ணே சேர்தல். முதலொடு சினைக்கு ஒற்றுமை உண்மையின், 'சென்றாரைக் காண' என்றும், குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின்; கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிப்படுகின்றதில்லை என அதனால் துயில பெறாது வருந்துகின்றாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி' என்பது அசைநிலை.)

English explanation

Set not; so may'st thou prosper, moon! that eyes may seeMy love who went away, but ever bides with me

May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.