அதிகாரம் / Chapter 11

திருக்குறள் 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம். இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று.

பரிமேலழகர்

நன்றி மறப்பது நன்று அன்று-ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று: நன்று அல்லது அன்றே மறப்பது நன்று-அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்.நல்லோர். விளக்கம் (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)

English explanation

'Tis never good to let the thought of good things done thee pass away;Of things not good, 'tis good to rid thy memory that very day

It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).