அதிகாரம் / Chapter 11

திருக்குறள் 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்.

பரிமேலழகர்

நம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு-தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்-எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். விளக்கம் (எழுமை' என்றது வினைப் பயன். தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள். 62). விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புதோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டு பாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது.)

English explanation

Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wiseFriendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes

(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.