அதிகாரம் / Chapter 11
திருக்குறள் 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.
பரிமேலழகர்
துன்பத்தின் துப்பு ஆயார் நட்புத் துறவற்க-துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க-அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. விளக்கம் (கேண்மை: கேள் ஆம் தன்மை, இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)
English explanation
Kindness of men of stainless soul remember evermoreForsake thou never friends who were thy stay in sorrow sore
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.