அதிகாரம் / Chapter 27
திருக்குறள் 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனைஅஃதிலார் மேற்கொள் வது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை. இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.
பரிமேலழகர்
தவமும் தவம் உடையார்க்கு ஆகும்-பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே; அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம்-ஆகலான், அத்தவத்தை அம் முன்தவம் இல்லாதார் முயல்வது பயன்இல் முயற்சியாம். விளக்கம் (பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.)
English explanation
To 'penitents' sincere avails their 'penitence';Where that is not, 'tis but a vain pretence
Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now).