அதிகாரம் / Chapter 27
திருக்குறள் 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை. இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.
பரிமேலழகர்
மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும்! விளக்கம் (துப்புரவு - அனுபவிக்கப்படுவன. ''வேண்டியாங்கு எய்தற்" பயத்தது ஆகலின் (குறள் 265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும் எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.)
English explanation
Have other men forgotten 'penitence' who striveTo earn for penitents the things by which they live
It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?