அதிகாரம் / Chapter 83

திருக்குறள் 823

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்ஆகுதல் மாணார்க் கரிது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும், மனம் நல்லாராகுதல் மாட்சியில்லார்க்கு அரிது. இது கல்வியால் அறிதல் அரிதென்றது.

பரிமேலழகர்

நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்லன பல நூல்களைக் கற்றவிடத்தும், மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது - அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை விளக்கம் (நல்லன - மனக் குற்றம் கெடுப்பன. 'மனம் நல்லர் எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் செற்றம் விடுதல். 'உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை பற்றி நட்பு என்று கருதற்க' என்பதாம்.)

English explanation

To heartfelt goodness men ignoble hardly may attain,Although abundant stores of goodly lore they gain

Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.