அதிகாரம் / Chapter 41

திருக்குறள் 402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும். இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.

பரிமேலழகர்

கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதவன் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல்; முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும். விளக்கம் ("இனைத்தென அறிந்த சினை" (தொல். சொல். 33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதான் என்பதாம். அவாவியவழிக் கடைப்போகாது; போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.)

English explanation

Like those who doat on hoyden's undeveloped charms are they,Of learning void, who eagerly their power of words display

The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.