அதிகாரம் / Chapter 41
திருக்குறள் 401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல். அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்: கோட்டி கொளல்- 'புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது.
பரிமேலழகர்
அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும்; நிரம்பிய நூல்இன்றி கோட்டி கோளல்தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல். விளக்கம் (அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை "கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக், கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்" (நற். 3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். "புல்லா எழுத்தின் பொருள்இல் வறுங்கோட்டி" (நாலடி. 155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.)
English explanation
Like those at draughts would play without the chequered square,Men void of ample lore would counsels of the learned share
To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.