அதிகாரம் / Chapter 40
திருக்குறள் 400
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல. இது கல்வி அழியாத செல்வமென்றது.
பரிமேலழகர்
ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி; மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும், முதலாயின செல்வமல்ல. விளக்கம் (அழிவின்மையாவது: தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும், வழிப்பட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை: தக்கார்கண்ணே நிற்றல். மணி, பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.)
English explanation
Learning is excellence of wealth that none destroy;To man nought else affords reality of joy
Learning is the true imperishable riches; all other things are not riches.