அதிகாரம் / Chapter 62
திருக்குறள் 613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம். இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.
பரிமேலழகர்
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று-முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு-எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. விளக்கம் (பொருள் கை கூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர் மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.)
English explanation
In strenuous effort doth resideThe power of helping others: noble pride
The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.