அதிகாரம் / Chapter 62
திருக்குறள் 612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று. இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.
பரிமேலழகர்
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று-வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக் கண் வினைகெடல் ஓம்பல்-அதனான் செய்யப்படும் வினைக் கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. விளக்கம் (குறை-இன்றியமையாப் பொருள். அது ''பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே'' [புறநா. 188] என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.)
English explanation
In action be thou, 'ware of act's defeat;The world leaves those who work leave incomplete
Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.