அதிகாரம் / Chapter 62

திருக்குறள் 611

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால். இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.

பரிமேலழகர்

என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும்-அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். விளக்கம் ('சிறுமை நோக்கி' என்பது 'பெருமை தரும்' என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே, அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)

English explanation

Say not, 'Tis hard', in weak, desponding hour,For strenuous effort gives prevailing power

Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).