அதிகாரம் / Chapter 62

திருக்குறள் 614

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டாலஞ்சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும். இஃது அறம் செய்யமாட்டானென்றது.

பரிமேலழகர்

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை-முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும்-படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம். விளக்கம் ('ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற் பெயர். பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடைனாயினும், அது தன் வறுமையான் முடியாது என்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது..)

English explanation

Beneficent intent in men by whom no strenuous work is wrought,Like battle-axe in sexless being's hand availeth nought

The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.