அதிகாரம் / Chapter 108
திருக்குறள் 1077
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்கூன்கையர் அல்லா தவர்க்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தம்கதுப்பினை ஒடிக்கும் வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு, ஈரக்கையையுந் தெரியார் கயவர். ஈரக்கை- கழுவினகை. இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது.
பரிமேலழகர்
கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு; ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத்தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். விளக்கம் (வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்; நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.)
English explanation
From off their moistened hands no clinging grain they shake,Unless to those with clenched fist their jaws who break
The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.