அதிகாரம் / Chapter 18

திருக்குறள் 178

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை, இது செல்வ மழியாதென்றது.

பரிமேலழகர்

செல்வத்திற்கு அஃகாமை யாதெனின்-சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறர் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை-அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம் விளக்கம் ('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.)

English explanation

What saves prosperity from swift decline?Absence of lust to make another's cherished riches thine

If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.