அதிகாரம் / Chapter 84
திருக்குறள் 840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும், சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடியிருத்தல். இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.
பரிமேலழகர்
சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும அமளிக் கண்ணே வைத்தாற் போலும். விளக்கம் (கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.)
English explanation
Like him who seeks his couch with unwashed feet,Is fool whose foot intrudes where wise men meet
The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.