அதிகாரம் / Chapter 105

திருக்குறள் 1048

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.

பரிமேலழகர்

நெருநலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ; வந்தால் இனி யாது செய்வேன்? விளக்கம் (அவ் வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள். 1045) துன்பங்கள், நெருநல்மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)

English explanation

And will it come today as yesterday,The grief of want that eats my soul away

Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?