அதிகாரம் / Chapter 105

திருக்குறள் 1047

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அறத்தோடு இயைபில்லாத நல்குரவுடையான், தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.

பரிமேலழகர்

அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும். விளக்கம் (அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அது நோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)

English explanation

From indigence devoid of virtue's grace,The mother e'en that bare, estranged, will turn her face

He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.