அதிகாரம் / Chapter 34
திருக்குறள் 335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும்
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும். இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.
பரிமேலழகர்
நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடாவண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும். விளக்கம் (மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும், 'வாராமுன்' என்றும், அதுதான் இன்ன பொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல், மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.)
English explanation
Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,Arouse thyself, and do good deeds beyond the power of death
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.