அதிகாரம் / Chapter 34
திருக்குறள் 336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.
பரிமேலழகர்
ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து - 'ஒருவன் நெருநல் உளனாயினான், அவனே இன்று இல்லையாயினான்' என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து; இவ்வுலகு - இவ்வுலகம். விளக்கம் (ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப் பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.)
English explanation
Existing yesterday, today to nothing hurled!-Such greatness owns this transitory world
This world possesses the greatness that one who yesterday was is not today.