அதிகாரம் / Chapter 54
திருக்குறள் 533
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு. இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.
பரிமேலழகர்
பொச்சாப்பார்க்கும் புகழ்மை இல்லை-பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு-அவ்வின்மை இந்நீதி நூலுடை யார்க்கேயன்றி உலகத்து எவ்வகைபட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. விளக்கம் [அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.]
English explanation
'To self-oblivious men no praise'; this ruleDecisive wisdom sums of every school
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.