அதிகாரம் / Chapter 12
திருக்குறள் 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பெருமையே தரினும் நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக.
பரிமேலழகர்
நன்றே தரினும்-தீங்கு அன்றி நன்மையே பயந்த தாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்-நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக. விளக்கம் (நன்மை பயவாமையின் 'நன்றே தரினும்' என்றார். 'இகத்தலான்' என்பது 'இகந்து' எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச் செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.)
English explanation
Though only good it seem to give, yet gainBy wrong acquired, not e'en one day retain
Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.