அதிகாரம் / Chapter 12
திருக்குறள் 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.
பரிமேலழகர்
தகுதி என ஒன்றே நன்று-நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல், நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின், விளக்கம் (தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார். "ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு 'தோறு'ம் என்பதன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவு நிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.)
English explanation
If justice, failing not, its quality maintain,Giving to each his due, -'tis man's one highest gain
That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.