அதிகாரம் / Chapter 11
திருக்குறள் 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.
பரிமேலழகர்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்-பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை-ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. விளக்கம் (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, 'ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தபுதலும்' (புறநா 34) இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது. முதலிய பாதகங்களைச் செய்தல்.)
English explanation
Who every good have killed, may yet destruction flee;Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.