அதிகாரம் / Chapter 118

திருக்குறள் 1178

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்காணாது அமைவில கண்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவு முளவோ?

பரிமேலழகர்

காதலர் பிரிந்து போயினாரல்லர், அர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. பேணாது பெட்டார் உளர் - நெஞ்சால் விழையாது வைத்துச் சொல் மாத்திரத்தால் விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க் கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்? விளக்கம் (செயலாற் பிரிந்து நின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமம் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை 'யான் ஆற்றவும், கண்கள் அவரைக் காண்டற்கு விருமபாநின்றன: என்பதாம். இனிக 'கொண்கனை' என்று பாடமாயின், 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை; இவ்வாறே தம்மை யொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ?' என்று உரைக்க. இதற்கு மன் அசைநிலை)

English explanation

Who loved me once, onloving now doth here remain;Not seeing him, my eye no rest can gain

He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.