அதிகாரம் / Chapter 94

திருக்குறள் 940

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூதுபோலத் துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர். இவை இரண்டினுக்கும் அஃதியல்பு.

பரிமேலழகர்

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல்-சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற் காதல் செய்யும் சூதன் போல; துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் - உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குந் தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயிர். விளக்கம் (சூது - ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவம மாக்கிக் கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க. இதனான் இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும கூறப்பட்டன.)

English explanation

Howe'er he lose, the gambler's heart is ever in the play;E'en so the soul, despite its griefs, would live on earth alway

As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.