அதிகாரம் / Chapter 9
திருக்குறள் 89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.
பரிமேலழகர்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை-உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு-அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். விளக்கம் (உடைமை-பொருளுடையனாம் தன்மை. பொருளாள் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)
English explanation
To turn from guests is penury, though worldly goods abound;'Tis senseless folly, only with the senseless found
That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.