அதிகாரம் / Chapter 78

திருக்குறள் 777

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பரவும் புகழை விரும்பி, உயிரை விரும்பாதார், கழல் கட்டுதல் அழகுடைத்து. இது புகழ் விரும்பும் படை வேண்டுமென்றது.

பரிமேலழகர்

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்-துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக் காரிகை நீர்த்து-கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து. விளக்கம் ('வையத்தைச் சூழும்' எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல்- அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.)

English explanation

Who seek for world-wide fame, regardless of their life,The glorious clasp adorns, sign of heroic strife

The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).