அதிகாரம் / Chapter 78

திருக்குறள் 778

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும் தமது முதன்மை குன்றுதல் இலர். இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது.

பரிமேலழகர்

உறின் உயிர் அஞ்சா மறவர்-போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இவர்-தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். விளக்கம் (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்" [புறநா. 31] என்றும், "புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம்யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" [புறா. 68] என்றும் கூறினார்.)

English explanation

Fearless they rush where'er 'the tide of battle rolls';The king's reproof damps not the ardour of their eager souls

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).