அதிகாரம் / Chapter 78

திருக்குறள் 779

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை அவர் தப்பியது சொல்லிப் பழிக்கவல்லவர் யாவர். இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது.

பரிமேலழகர்

இழைத்தது இகவாமைச் சாவாரை-தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார்-அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்? விளக்கம் (இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னானாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்' என்பது அவாய் நிலையான் வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற் சிறப்பு கூறியவாறு.)

English explanation

Who says they err, and visits them scorn,Who die and faithful guard the vow they've sworn

Who would reproach with failure those who seal their oath with their death ?