அதிகாரம் / Chapter 5

திருக்குறள் 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.

பரிமேலழகர்

வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன்-இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்-வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். விளக்கம் (பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலை யாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ்; அதனை இறுதிக்கண் கூறுப.)

English explanation

Who shares domestic life, by household virtues graced,Shall, mid the Gods, in heaven who dwell, be placed

He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.