அதிகாரம் / Chapter 26
திருக்குறள் 256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை. இது கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை யென்றார்க்கு அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.
பரிமேலழகர்
தினற் பொருட்டு உலகு கொல்லாது எனின்-பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின்; விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல்-பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. விளக்கம் ('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. 'பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.)
English explanation
'We eat the slain,' you say, by us no living creatures die;Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy
If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.