அதிகாரம் / Chapter 26

திருக்குறள் 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ணது உணர்வார்ப் பெறின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உயிர் நிலையைப் பெறுதல் ஊனை யுண்ணாமையினால் உள்ளது; ஊனையுண்ண உண்டாரை எல்லாவுலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது. அங்காவாமை- புறப்பட விடாமை.

பரிமேலழகர்

புலால் பிறிதொன்றன் புண்-புலாலாவது பிறிதோர் உடம்பின் புண்; அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும்-அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும். விளக்கம் ('அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.)

English explanation

With other beings' ulcerous wounds their hunger they appease;If this they felt, desire to eat must surely cease

If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.