அதிகாரம் / Chapter 47
திருக்குறள் 464
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்.
பரிமேலழகர்
தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார்; இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார், விளக்கம் [தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒரு தலையாகலின், தெளிவுள் வழித் தொடங்குக என்பதாம்.]
English explanation
A work of which the issue is not clear,Begin not they reproachful scorn who fear
Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.