அதிகாரம் / Chapter 47
திருக்குறள் 465
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மேற்சொன்னவகைகளில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழுதல் பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி. இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது.
பரிமேலழகர்
வகை அறச் சூழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல்; பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம். விளக்கம் [அத்திறங்களாவன: வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான், முற்றுப் பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும். இழுக்கும் கூறப்பட்டன]
English explanation
With plans not well matured to rise against your foe,Is way to plant him out where he is sure to grow
One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances).