அதிகாரம் / Chapter 47

திருக்குறள் 466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்; செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும். இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று.

பரிமேலழகர்

செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன் வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும்; செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றை செய்யாமை தன்னானும் கெடும். செய்யத்தக்கன அல்லவாவன: பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும், ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. விளக்கம் (செய்யத் தக்கனவாவன; அவற்றின் மறுதலையாயின. இச் செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இருவகைத்தாய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.]

English explanation

'Tis ruin if man do an unbefitting thing;Fit things to leave undone will equal ruin bring

He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.