அதிகாரம் / Chapter 47

திருக்குறள் 463

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார். இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது.

பரிமேலழகர்

ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக் கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை; அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார். விளக்கம் ['கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர் எச்ச வினை கொண்டது. எச்ச-உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார், 'செய்வினை' என்றார்.]

English explanation

To risk one's all and lose, aiming at added gain,Is rash affair, from which the wise abstain

Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.