அதிகாரம் / Chapter 3

திருக்குறள் 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். து பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.

பரிமேலழகர்

துறந்தார் பெருமை துணைக் கூறின் - இரு வகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையார் என அரியலுற்றாற் போலும். விளக்கம் (முடியாது என்பதாம். 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.)

English explanation

As counting those that from the earth have passed away,'Tis vain attempt the might of holy men to say

To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.