அதிகாரம் / Chapter 131

திருக்குறள் 1307

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்று கொல் என்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்: அதுப்போலப் புலவியும் அன்புடையார்மாட்டேயாயின் இனிதாம்.

பரிமேலழகர்

இதுவும் அது. புணர்வது நீடுவது விளக்கம் (கொல்) அன்று கொல் என்று- இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக்'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.)

English explanation

A lovers' quarrel brings its pain, when mind afraidAsks doubtful, 'Will reunion sweet be long delayed?'

The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.