அதிகாரம் / Chapter 131

திருக்குறள் 1306

துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின் காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும் ஆதலால். இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும். விளக்கம் (மிக முதிர்ந்திறும் 'எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் 'துனியில்லையாயின், கனியற்று' என்றும்; கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின், 'புலவியில்லையாயின் கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.)

English explanation

Love without hatred is ripened fruit;Without some lesser strife, fruit immature

Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.