அதிகாரம் / Chapter 131
திருக்குறள் 1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகைபூஅன்ன கண்ணார் அகத்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம், பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல். நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.
பரிமேலழகர்
தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே விளக்கம் (சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான். 'நலத்தகை நல்லார்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல். தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.)
English explanation
Even to men of good and worthy mind, the petulanceOf wives with flowery eyes lacks not a lovely grace
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.