அதிகாரம் / Chapter 6

திருக்குறள் 55

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

பரிமேலழகர்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என-பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள்; பெய் எனப் பெய்யும் மழை-'பெய்' என்று சொல்ல, மழை பெய்யும். விளக்கம் (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழா நின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.)

English explanation

No God adoring, low she bends before her lord;Then rising, serves: the rain falls instant at her word

If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.