அதிகாரம் / Chapter 6
திருக்குறள் 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.
பரிமேலழகர்
பெண்ணின் பெருந்தக்க யாஉள ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்-அவள் மாட்டுக் கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். விளக்கம் (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின், 'யா உள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
English explanation
If woman might of chastity retain,What choicer treasure doth the world contain
What is more excellent than a wife, if she possess the stability of chastity ?