அதிகாரம் / Chapter 1

திருக்குறள் 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.

பரிமேலழகர்

இறைவன் அடி (சேர்ந்தார்) பிரவிப் பெருங்கடல் நீந்துவர் - இரைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெருங்கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். விளக்கம் (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப்பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் எனப்து சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவைன் அடியையே நினைப்பார்க்கு பிறவி அறுதலும், அவ்வாறின்றி மாறி நினைப்பார்க்கு அஃது அறாமையும் ஆகிய இரன்டும் இதனான் நியமிக்கப்பட்டன.

English explanation

They swim the sea of births, the 'Monarch's' foot who gain;None others reach the shore of being's mighty main

None can swim the great sea of births but those who are united to the feet of God.