அதிகாரம் / Chapter 23

திருக்குறள் 229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல். தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.

பரிமேலழகர்

நிரப்பிய தாமே தமியர் உணல்-பொருட்குறை நிரப்ப வேண்டிய வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல்; இரத்தலின் இன்னாது மன்ற-ஒருவார்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. விளக்கம் (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக்குறித்து அத்துணை ஈட்டுதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை. தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.)

English explanation

They keep their garners full, for self alone the board they spread;-'Tis greater pain, be sure, than begging daily bread

Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.