அதிகாரம் / Chapter 23

திருக்குறள் 230

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈதல் இயையாக் கடை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து. இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.

பரிமேலழகர்

சாதலின் இன்னாதது இல்லை-ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை; அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது-அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. விளக்கம் (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.)

English explanation

'Tis bitter pain to die, 'Tis worse to live.For him who nothing finds to give

Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.